35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவிப்பு 4 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (19.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மிவைர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வளியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

Leave a Comment