தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்தது. போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் மாவட்டங்களில் பம்பு செட் ஆழ்துளைக்கிணறு பயன்படுத்தி மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. நாளுக்கு…
Category: தமிழ்நாடு
சவுக்கு சங்கரிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை
யூடியூபா் சவுக்கு சங்கரை 24 மணி நேர காவலில் எடுத்த போலீஸாா், அவரிடம் அமைச்சா் ஒருவருக்கும், அவருக்கும் உள்ள தொடா்பு குறித்து விடியவிடிய விசாரித்தனா் என சவுக்கு சங்கரின் வழக்குரைஞா் பாலநந்தகுமாா் கூறினாா். தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலா்களை அவதூறாகப் பேசிய யூடியூபா் சவுக்கு சங்கா் மீது, உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி சைபா் கிரைம் குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் உதகையில் உள்ள நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் சவுக்கு சங்கரை காவல்துறையினா் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து, சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை சாா்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 24 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸ் விசாரணை முடிந்த…
கேரளாவுக்கு ரூ.5 கோடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை…
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் சுட்ட கதை, நளனும் நந்தினியும் மற்றும் முருங்கக்கா சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பு பணிகள் மட்டுமல்லாலல் யூடியூபில் படங்களை விமர்சித்தும் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னதிரை பிரபலமான மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகள் மீது நெட்டிசன்கள் வன்மத்தையும், மகாலட்சுமி பணத்திற்காகத்தான் இவரை திருமணம் செய்துக் கொண்டார் என கமெண்டுகளை பதிவு செய்து வந்தார்கள். ஆனாலும் இது எந்த விதத்திலும் ரவிந்தர் மற்றும் மகாலட்சுமி வாழ்க்கையை பாதிக்கவில்லை. இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது . சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்ற…
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சொந்த ஊரான கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி…
வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்
வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்கிறது. இந்நிலையில், வால்பாறை வட்டாரத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஜூலை 30) காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து சோலையார் அணை இடது கரை செல்லும் பகுதியில் முத்து என்கின்ற ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மண்சுவர் வீடு அதிகாலையில் இடிந்து விழுந்தது இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது பேத்தி தனபிரியா (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலையில் அவ்வழியாகச் சென்றவர்கள் வீடு இடிந்து…
தமிழகத்தில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பின
தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக உள்ள 90 நீர்த்தேக்கங்களில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பியுள்ளன. மொத்த நீர்த்தேக்கங்களில் 71.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம், காற்றின் திசை மாறுபாடு உள்ளிட்டவை காரணமாக கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து மழைப் பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை மே 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை இயல்பைவிட அதிகமாக மழை பொழிந்துள்ளது. இதனால் பல அணைகள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பொழிந்துள்ளதால், அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. பின்னர் நீர்வரத்து பாதியாக குறைந்தது. இருப்பினும், மேட்டூர் அணை அதன்…
சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சாபில் திருநங்கககளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணி புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினையும், ஊக்கத் தொகையையும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: “திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணிபுரிந்து, அவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு 2021 முதல் விருதும், ரூ. ஒரு லட்சம் காசோலையும் வழங்கப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம்…
பாஜக பிரமுகர் கொலை குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு
சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில்…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இழப்பீடு வழங்கி வழக்கை முடிப்பது எப்படி நியாயம் ஆகும்- உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் ஆகும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு தனி…
