தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த 25 பெண்கள் மூச்சு திணறி அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: தமிழ்நாடு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஒட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள்…
ஐஏஎஸ் அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அமுதா, தற்போது முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-யை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
388 அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் உத்தரவு
சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து, அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சமையலறை மற்றும் உணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவு தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் அதிமுகவினர் திரண்டதால் பதட்டம்
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான செல்வராஜ், பிரவீன் உள்பட 7 பேர் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் மற்றும் பிரவீன் உள்பட 13 பேர் தன்னை மிரட்டி அந்த ரூ.100 கோடி…
அம்மா உணவகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். அம்மா உணகவகத்தின் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். உணவகத்தில் நின்றிருந்த பொதுமக்களிடமும் தகவல்களை கேட்டறிந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மேலும் பல ரவுடி கும்பல்கள் உதவி நடவடிக்கைக்கு பயந்து ஆந்திராவுக்கு ஓட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு சென்னையில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூரை சேர்ந்த திருவேங்கடம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் மற்ற 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டதாக போலீசார் முதலில் கூறி இருந்தனர். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஆற்காடு சுரேசின் கொலை சம்பவம் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம்…
தமிழக சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும். ஆனால் கடந்த சில வருடங் களாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஒருசில மசோதாக்களில் கையெழுத் திடாமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது. இதனால் கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் இந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது. இந்த சூழலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கவர்னர் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இப்போது ஒப்புதல்…
மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய ரெயில் சேவை: மத்தியமைச்சர் தொடங்கி வைத்தார்
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில் (வண்டி எண்.16766/16765) சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், மேட்டுபாளையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதேபோல, மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் இயக்கக்கூடிய புதிய ரெயிலையும், கோவை – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
“கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கவேண்டும் ” – அமைச்சர் சாமிநாதன் பேச்சு
கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா இன்று (ஜூலை 18) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியது: “நமது அரசு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு இடங்களில் நடத்தும்…
