புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில்திமுக முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுகரசுக்கு பாரதி பொற்பதக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கி சிறப்புரை !

 புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில், திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சி.பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு பாரதி பொற்பதக்கம் விருதை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கி சிறப்பித்தார்.

புதுவை தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா மற்றும் பாரதி பொற்பதக்கம் வழங்கும் விழா நேற்று மாலை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்ச்சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு. மோகன்தாசு வரவேற்று பேசினார்.

துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி புலவர் உசேன், கலைமாமணி எம்.எஸ். ராஜா, பொறிஞர் மு. சுரேசுகுமார், பாவலர் அ. சிவேந்திரன், பாவலர் ர. ஆனந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமையில் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது.

விழாவில், புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் சி.பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு ஒரு சவரன் எடையுள்ள பாரதி பொற்பதக்கத்தை வழங்கி வாழ்த்தி பேசினார். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

பாரதி பொற்பதக்கம் பெற்றுள்ள வழக்கறிஞர் சி.பி. திருநாவுக்கரசு தி.மு.கழகம் சார்பில், 2022–ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், கழகத் தலைவர் தளபதி அவர்களின் திருக்கரங்களால் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, திமுக பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் மு. வைத்தியநாதன், எம்.எல்.ஏ., திமுக மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த விழாவில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பொறிஞர் மு. பாலசுப்ரமணியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால், வெ. இராமசாமி, ப. செல்வநாதன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் செ. நடராஜன், இரா. சக்திவேல், எல். மணிகண்டன், மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி. மணிமாறன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ச. பரிமளம், தொமுச பேரவை சூ. அண்ணா அடைக்கலம், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரா. சுமதி, சிறுபான்மையினர் நலப்பிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாலிது, வர்த்தகர் அணித் தலைவர் செல்வா, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் புலவர் ப. கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் ஜெரால்டு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின், மாணவர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், யோகேஷ், விமல், நரேந்திரன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, உருளையன்பேட்டை தொகுதி பொருளாளர் சசிகுமார் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment