திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்து செல்வதற்காக தயாராகினர். இதையடுத்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச்சென்று மின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டி…
Category: தமிழ்நாடு
சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி திணிப்பு- மத்திய கல்வி அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்
சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பி பிரிவு தேர்வில் ஹிந்திக்கு 300க்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான அநீதி மீண்டும் தொடங்கியுள்ளது என்று சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.…
சென்னையை சேர்ந்த ஆன்லைன் அமாசடி பேர்வழி புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஜஸ்ட் டயல் என்ற ஆப்பை பயன்படுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றிய சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஜெயக்குமார் என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் கோவில் திருவிழாவுக்காக தவில் மற்றும் நாதஸ்வரம் வேண்டுமென்று ஜஸ்ட் டயல் ஆப்பில் தேடிய பொழுது ஒரு நபர் தன்னிடம் தவில் மேளம் இருப்பதாக கூறியதையடுத்து, புகார்தாரர் இந்த தேதிக்கு எங்களுடைய கோவில் திருவிழாவிற்கு நாதஸ்வரம் தவில் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கான முன்பணம் 22 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்., மேற்படி நபர் கூறியபடி குறிப்பிட்ட தேதியன்று நிகழ்ச்சிக்கு நாதஸ்வரம் மேளத்தை அனுப்பவில்லை. இது குறித்து இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஜெயக்குமார்…
திமுக அரசின் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு தொழிலாளர் கட்சி வெற்றி- தமிழக அரசு அறிக்கை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அத்திட்டங்களில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, “நான் முதல்வன் திட்டம்”, “கலைஞர் கனவு இல்லம் திட்டம்” ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவ – மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில…
இணையவழிச்சேவை மூலம் பட்டா சிட்டா ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை-தமிழக முதலமைச்சர் வழங்கினார்
தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற் நுட்பக்கல்வி, ஐ.டி.ஐ. படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில்…
ஆம்ஸ்ட்ராங் மரணம் அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பு- உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் – வேதனையும் அடைந்தேன். அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும். இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…
புதிய சட்டம் நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதற்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வக்கீல்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. தி.மு.க. சட்டத்துறை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செய லாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள்…
புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்- மத்திய அரசுக்கு சீமான் கோரிக்கை
அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டத்தையும், சனநாயகத்தையும் பாதுகாக்கப் போராடும் சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) பாரதிய நியாய சங்கிதா (BNS) எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை(CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சங்கிதா (BNSS), எனவும், இந்திய ஆதாரச்சட்டத்தை (IE Act)…
ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படத்தில்விஜயகாந்த் பயன்படுத்து கூடாதுதேமுதிக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
