ஜஸ்ட் டயல் என்ற ஆப்பை பயன்படுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றிய சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஜெயக்குமார் என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் கோவில் திருவிழாவுக்காக தவில் மற்றும் நாதஸ்வரம் வேண்டுமென்று ஜஸ்ட் டயல் ஆப்பில் தேடிய பொழுது ஒரு நபர் தன்னிடம் தவில் மேளம் இருப்பதாக கூறியதையடுத்து, புகார்தாரர் இந்த தேதிக்கு எங்களுடைய கோவில் திருவிழாவிற்கு நாதஸ்வரம் தவில் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கான முன்பணம் 22 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்., மேற்படி நபர் கூறியபடி குறிப்பிட்ட தேதியன்று நிகழ்ச்சிக்கு நாதஸ்வரம் மேளத்தை அனுப்பவில்லை. இது குறித்து இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஜெயக்குமார் என்ற நபர்தான் மேற்படி அஸ்வின்-யை நாதஸ்வரம் தவில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அவரிடமிருந்து 22,ஆயிரத்தை வங்கி கணக்கில் வாங்கிக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து எஸ்எஸ்பி கலைவாணன் உத்தவின்பேரில், சைபர் கிரைம் எஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், சைபர் கிரைம் ஆய்வாளர் . தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர்களின் தலைமையின் கீழ் சைபர் கிரைம் போலிசார் மேற்படி ஜெயக்குமார் என்ற குற்றவாளியை நேற்று இரவு சென்னையில் கைது செய்தனர். புதுச்சேரி இணைய வழி அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர் புதுச்சேரியில் மட்டும் ஏழு நபர்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. ஒருவருக்கு சென்ட்ரிங் சீட் அனுப்புகிறேன் என்றும், இரண்டு தனியார் பள்ளிகளுக்கு மொபைல் கழிறை அனுப்புகிறேன் என்றும், ஒரு நபரை எல்இடி டிவி வாடகைக்கு தருகிறேன் என்றும், செண்டமேளம் அனுப்புகிறேன் கூறி பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும், இவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை ஜஸ்ட் டயல் ஆப்-ல் பல்வேறு தொழில்கள் செய்வது போல் பதிவு செய்துஉள்ளார். அவகளிடம் கேட்கும் பணத்தை பெற்றுக்கொண்டு யாருக்கும் எந்த பொருட்களையும் வாடகைக்கு அனுப்பாமல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30-க்கும் மேற்பட்ட வங்கி புத்தகங்கள் காசோலைகள் 20 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்., தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது பற்றி புதுச்சேரி இணைவழி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன். அதில் இணைய வழியில் வருகின்ற எந்த ஒன்றையும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் அதனுடைய உண்மை தன்மை அறிந்த பிறகு பணம் செலுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஆன்லைன் அமாசடி பேர்வழி புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
