கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம்- தமிழக அரசு அதிரடி

சட்டசபையில் மது விலக்கு திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் முத்துசாமி இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது, அருந்துவது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக…

கொடநாடு வழக்கு இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க நடவடிக்கை -முதல்வர் அறிவிப்பு

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு வெளிநாட்டு அழைப்புகள் வந்துள்ளதால்இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில், மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

தமிழக மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் “நன்றி தங்கச்சி” சென்னை மெரினா காட்சி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் “பேல் பூரி” வாங்கிய யூடியூபர், ஓகே… தாங்க்யூ என்று கூறினார். what do you say for like sister in… என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் “தங்கச்சி” என்று கூறுகிறார். younger sister is தங்கச்சி என்று கேட்கிறார். அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார். இதையடுத்து “நன்றி தங்கச்சி” என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் “நன்றி அண்ணா” என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார். தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார். அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார். அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார். வெண்ணிலாவின் “பேல் பூரி” என்று சுவைக்கிறார். இந்த…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.வெடி விபத்தில் 3 அறைகள் சேதமான நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம்!

நாட்டின் பிற மாநிலங்களை விட பெண் தொழில் முனைவோர் அதிகமுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை (PLFS 2022-23) ஆய்வில் தகவல் 15-59 வயது மகளிரில் தமிழ்நாட்டில் 69.19% பேரும்,உ.பியில் 13.95% பேரும்,குஜராத்தில் 13.16% பேரும்,மேற்கு வங்கத்தில் 03.96% பேரும் தொழில் முனைவோர்களாக உள்ளதாக ஆய்வில் தெரிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை- கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மிக அதிக உடல் எடையுடன் (Morbid Obesity) உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடலிறக்கம், கல்லீரல் செயலிழப்பு, இதயநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளோருக்கான உயிர்காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளில் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன.இதுவரை இருந்திராத அளவுக்கு, அதிக…

கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல்

ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் தேக்க தடுப்பணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் அடி பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆற்றில் சிறிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதில் குளிப்பதற்காக ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இந்த தடுப்பணையின் கிழக்கு பகுதியில் தேங்கிய தண்ணீரில் குளித்த சிறுவன் ஒருவன் அதில் மூழ்கி உயிரிழந்தான். அத்துடன் இந்த தடுப்பணையில் கழிவு நீர் கலக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கழிவு நீர் கலப்பதை தடுக்க…