வடசென்னையில் அறிவுசார் மையம்-நூலகம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:- சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.…

தமிழக ஆளுநருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்-சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது; ‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர்,…

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை, நாமக்கல் திருவண்ணாமலை, காரைக்குடி என 4 மாநகராட்சிகள்உதயம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த…

முடிவுக்கு வந்தஃபாக்ஸ்கான் சர்ச்சை

திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்த செய்திகளின் பின்னணியில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஃபாக்ஸ்கான் இந்தியா இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விளக்கத்தில், “நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30%…

பழைய பஸ்களை மாற்றும் பணி தீவிரம்-தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சட்ட சபையில் கேள்வி நேரத்தில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் காரைக்குடியில் இருந்து கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பேருந்து இயக்க அவசியம் இல்லை என பதிலளித்தார். மேலும், பழைய பேருந்து களை மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்காத காரணத்தால் பழைய பேருந்துகளை மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்தப்பின் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து…

விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 63பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மெத்தனால் சப்ளை செய்த புதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால்,…

கள்ளக்குறிச்சி விவகாரம் எடப்பாடி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனக்…

ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பலஅவறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு

சட்டசபையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:- அடுத்தவன் சொத்தை அபகரித்தால் ஆண்டவன் தான் கேட்க வேண்டும். ஆண்டவன் சொத்தை அபகரித்தால் ஆள்பவர் தானே கேட்க வேண்டும். அந்த வகையில், திராவிடமாடல் ஆட்சியில் இதுவரை ரூ.6,004 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இந்த 3 ஆண்டுகளில் தெய்வங்களாக இருக்கின்ற சிலைகள், கலைப்பொருட்கள் மொத்தம் 420 இனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பாதுகாப்பு அறைகள் கட்டி பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் திருப்பணிகள் இதிகாச காலத்திற்கு இணையானது. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுகிற அளவிற்கு 8,962 கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மொத்த திருப்பணிகள் 20,166 மதிப்பீட்டுத் தொகை…