தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்துள்ளதால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். UGC தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ரத்தானதால் பெரும் பாதிப்பு.மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Category: தமிழ்நாடு
கள்ளச்சாராயம் குடித்து முண்டியம் பாக்கத்தில் சிகிச்சை பெறுபவர்களிடம் தேசியநல ஆணையர் விசாரணை
கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின் (21), ஜெகதீஸ்வரன் (24) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே உள்ள ஆரியரில் நடந்த ஒரு விசேஷத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளனர் . அப்போது தேவபாண்டலத்தில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர்சொந்த ஊருக்கு வந்து விட்டனர். அன்றில் இருந்து வாந்தி, மயக்கத்தில் இருவரும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை கண்எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனே முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. தேசிய ஆதி திராவிடர் நல ஆணையர் ரவி வர்மன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது விழுப்புரம் ஆர்டிஓ., ஷாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர்…
தமிழக ஊரகப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த ரூ.250 கோடியில் 5 ஆயிரம் புதிய சிறு குளங்கள்- அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் 5,000 புதிய சிறு குளங்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டார். அதில், மாநில நிதிக்குழு, மத்திய நிதிக்குழு நிதியுடன் ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பழுதடைந்துள்ள 500 ஊராட்சி அலுவலக கட்டிடங்கள் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.150 கோடியில் கட்டப்படும். 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் தலா ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.60 கோடியில் கட்டப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக வளாகம் ரூ.10 கோடியில் கட்டப்படும். திருவாரூர், மதுரை,…
தேர்வில் தோல்வி- கண்டித்த தாய் தம்பியை கொலை கல்லூரி மாணவர் கைது
சென்னை திருவொற்றியூர் திருநகர் முதல் தெரு மார்வாடி காலனியை சேர்ந்தவர் பத்மா (48). இவரது கணவர் முருகன் ஓமன் நாட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் நித்தேஷ் என்ற மகனும், 15 வயதில் சஞ்சய் என்ற இளைய மகனும் உள்ளனர். பத்மா அக்குபஞ்சர் தெரப்பிஸ்ட்டாக வேலை செய்து வந்தார். நித்தேஷ் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். சஞ்சய் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நித்தேஷ் சரிவர படிக்காமல் இருந்ததாகவும், 14பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததாலும் அவரது தாய் பத்மா அடிக்கடி நித்தேஷை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், நித்தேஷ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர், அவரது நண்பர்கள் சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நித்தேஷை கடந்த சில…
எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட தமிழஅரசு வேண்டும்- முன்னாள் முதல்வர் பழனிச்சாமி
அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகளை கேட்டறிந்தேன். 34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, “மெத்தனால் விஷ முறிவு மருந்தான உயிர்க் காக்கும் Fomepizole மருத்துவமனையில் இருப்பு இல்லை” என்கிற வேதனையை செய்தியாளர்களிடத்தில் பகிர்ந்திருந்தேன். இதனை, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களே கவலையுடன் தெரிவித்தனர். நான் சுட்டிக்காட்டிய பிறகே நேற்று (21ம் தேதி) அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான Fomepizole ஆர்டர் செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தபிறகு இன்று (22ம் தேதி) மும்பையில் இருந்து தருவிக்கப்பட்ட Fomepizole மருந்துகள் விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.ஜூன் 20 உயிர்க் காக்கும் விஷ முறிவு…
இலங்கையின் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 18 பேர் சிங்கள கடற்படையினர் கைது செய்தனர்
கடந்த மூன்று தினங்களாக கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்று கடற்சீற்றம் சற்றே குறைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கைக கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 18 மீனவர்களும் காங்கேயன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைதான 18பேரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதால் இதற்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளகுறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு- 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு
கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம். கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.* கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ். இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா? சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க.…
கடலூர் தாழங்குடா மீனவர்களை தாக்கி மீன்களை பறித்து சென்றபுதுச்சேரி வீராம்பட்டினம் மீனவர்கள்
கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம் பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு படகில் 4 பேர் இவர்களது படகு அருகில் வந்தனர். பின்னர் தாழங்குடா மீனவர்களிடம் குடிநீர் வேண்டும் என கேட்டு, தாங்கள் கொண்டு வந்த காலி பாட்டிலை வழங்கினார்கள். மேலும், நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என கேட்டனர். நாங்கள் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் என பதில் கூறிவிட்டு, பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 4 பேரும், நாங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இந்த பகுதியில் வந்து நீங்கள் ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? மீன்பிடிப்பதற்கு யார்? உங்களுக்கு அனுமதி அளித்தனர்? உங்கள் படகை சிறை பிடித்து…
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைப்பு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
முறைகேடு புகார் எதிரொலியாக யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர், யுஜிசியுடன் இணைந்து, வாழ்க்கை அறிவியல், வேதியியல் அறிவியல், இயற்பியல் அறிவியல், கணித அறிவியல் மற்றும் பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி மே 27-ந்தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்கி ஜூன் 27-ந் தேதி வரை நடைபெற இருந்தது.இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்விற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என…
