கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின் (21), ஜெகதீஸ்வரன் (24) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே உள்ள ஆரியரில் நடந்த ஒரு விசேஷத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளனர் .
அப்போது தேவபாண்டலத்தில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர்சொந்த ஊருக்கு வந்து விட்டனர். அன்றில் இருந்து வாந்தி, மயக்கத்தில் இருவரும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை கண்எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனே முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
தேசிய ஆதி திராவிடர் நல ஆணையர் ரவி வர்மன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது விழுப்புரம் ஆர்டிஓ., ஷாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.