தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

ஏர்வாடி தர்காவின் 850-ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 850-ஆம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மவ்லீது ஷரீப் உடன் மே 9-ஆம் தேதி தொடங்கியது. அதனையடுத்து மே 19-ஆம் தேதி நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில்…

தாய்ப்பால் விற்பனையை கண்கானித்து நடவடிக்கை- மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு

சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர், மாதவரம் கே.கே.ஆர். கார்டன் 1-வது தெருவில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மருந்து கடையில், மாதவரம் பால்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் வாங்கி அவற்றை பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து 30 மில்லி 500 ரூபாய் என அப்பகுதியில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுபாஷ் சந்திரபோஸ், அருளானந்தம் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நேற்று அந்த மருந்து கடையில் அதிரடியாக சோதனை செய்தனர். அதில் 50 பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்தையாவிடம் உணவு…

பச்சை நிறமாக மாறிய வீராணம் ஏரி தண்ணீர் பொதுமக்கள் அச்சம்- அச்சப்படதேவையில்லை அதிகாரிகள்

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது வீராணம் ஏரி. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைப்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 17-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம் வறண்டு கிடந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 29-ஆம்தேதி முதல் சென்னைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற முயற்சி ஏமாந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்(வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அவரும், அவரது மனைவி விஜி(26), மகள் வின்சிலின்(6) ஆகியோர் அவர்கள் வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் கடன் செயலி…

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று fட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளி களின் கட்டணக் கொள்ளை யைத் தடுக்க முடியவில்லை. இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்?…

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது தள்ளிவைப்புஜூன் 10 ஆம் தேதி திறக்கப்படும்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.கோடை வெயில் அதிகரித்துள்ளதால் ஜூன் 6-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்னதாக, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ்,ஜி.கே.வாசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” என அழைக்கப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணிநீக்கம்

திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். 2003ல் சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் வெள்ளத்துரை. இந்த நிலையில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை திடீரென்று இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் ராமு என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த வழக்கில் வெள்ளத்துரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் வெள்ளத்துரை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை இழிவு படுத்தி யூடியூப்பில் பதிவேற்றம் விருதுநகரை சேர்ந்த யூடியூப்பரை புதுச்சேரி சைபர் கிராம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்

விருதுநகரை சேர்ந்த துர்க்கை ராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் பின் தொடர்கின்றனர். அதில் அவர் பல பெண்களுடன் யூடியூப் சேனல் துவக்குவது எப்படி என்றும் நிறைய சர்ப்ரைஸை தங்களது சேனலுக்கு வரவேற்பது எப்படி என்றும் கூறி, அவர்களிடம் பழகி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி புதுச்சேரியை சார்ந்த ஒரு பெண் அவரது யூடியூப் சேனல் மூலம் அவருடன் பேசி பழகி உள்ளார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இதற்கு முன் பேசிய போது பதிவு செய்த ஆடியோ மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து பேசி அவரது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த பதிவேற்றம் செய்த ஆடியோ மற்றும் வீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் . மேலும்…

பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடிசாமி தரிசனம்

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்வடைந்தது. பிராசரம் ஓய்ந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் இருப்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி வந்த அவர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் 1-ஆம் தேதி மதியம் வரை இவர் தியானத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.