ஏம்பலம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நினைவுநாள் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் நடந்தது

.


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 3வது  நினைவு தினம் ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் நடந்தது.  மாநில கழகச் அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்  எதிர்க்கட்சி தலைவருமான சிவா  வழிகாட்டுதலின்படி  கிருமாம்பாக்கம் கடைவீதி நான்கு முனை  சந்திப்பில் நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருஉருவப்படத்திற்கு தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில்  தொகுதி பிரதிநிதி கிருமாம்பாக்கம் ஜெகநாதன் தொகுதி பொருளாளர் ஈச்சங்காடு இளம்பரிதி, இவர்கள் முன்னிலையிலும் தொகுதி துணைச் செயலாளர்  கோவிந்தராஜ் அவர்களும் கழக முன்னோடி குடந்தை மனோகர் அவர்களும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
தொகுதி மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கௌசல்யா சண்முகம் செயற்குழு உறுப்பினர்கள் பிள்ளையார்குப்பம்  ராமலிங்கம் நரம்பை
ராமர் என்ற தனபால் அரங்கனூர் அருண் என்ற பச்சையப்பன்  கிருமாம்பாக்கம் அருள்தாஸ் பொதுக்குழு உறுப்பினர் ஏம்பலம் பழனி என்ற வெங்கடேசன் கிளைக் கழக செயலாளர்கள் கிருமாம்பாக்கம் சரவணன் ஆறுமுகம் குருசாமி மேஸ்திரிஹரி கிருஷ்ணன்  கண்ணன் நிவாஸ் காளிதாஸ் ஞானசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் கழக பற்றாளர்கள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தமிழின தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சி இறுதியில் தொகுதி துணைச் செயலாளர் வாலிமுருகன் நன்றி  தெரிவித்தார்.

Related posts

Leave a Comment