தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், “எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர்,…
Category: தமிழ்நாடு
புத்தாண்டு கொண்டாட்டம் வனத்துறை கட்டுபாடு
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்கள் மலையடிவார பகுதியில் இருக்கும் வனங்களுக்கு சென்று அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடிப் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற பகுதிகளில் ரிசார்ட்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டையொட்டி பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கேம்ப் பயர் மற்றும் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தவும் வனத்துறையினர் இந்தாண்டும் வழக்கம்போல தடை விதித்து உள்ளனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக…
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.80 அடி!
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 29) காலை வினாடிக்கு 2701 கன அடியிலிருந்து 2516 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.72அடியிலிருந்து 119.80அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.15 டிஎம்சியாக உள்ளது.
எதிர்ப்புக்கு மத்தியில் பொறுப்புக்கு வந்தால் செயல்பட முடியாது- பாமக பதவி முகுந்தன் விலகுகிறார்
?விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ”இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்” என்றார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை…
100 வயதை கடந்தும் நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, நல்லகண்ணுவிற்கு கம்பீரம் மற்றும் செவ்வணக்கத்தை தெரிவிக்கிறேன். நான் இங்கு வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன். 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை; கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கினேன். பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா. இயக்கம் வேறு,…
தடையை மீறி தேமுதிகவினர் பேரணி
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்தின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்த தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் தொண்டர்கள் பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.மாநில…
48வது புத்தகக் கண்காட்சி- 6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு, பேராசிரியர் அருணன் – உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார…
இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மனு தாரர்கள், எதிர் மனு தாரர்கள், அவர்களுடைய பதில், ஆட்சேபனைகள் இருந்தால் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று…
கோவிலுக்கு பக்தர்கள் யானை வாங்கி கொடுத்தால் பெற்றுக் கொள்ளப்படும்- அமைச்சர் சேகர் பாபு
கோவிலுக்கு பக்தர்கள் யானை வாங்கி கொடுத்தால் பெற்றுக் கொள்ளப்படும்- அமைச்சர் சேகர் பாபு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வரப்பெற்ற ரூ.136 கோடி மதிப்பிலான 192.984…
“எங்கும் கொலை; எதிலும் கொலை”- எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கும் கொலை; எதிலும் கொலை” என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி! இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை: ● சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு ●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை ●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில்…
