டிசம்பர் 15-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (vii) மற்றும் 25 (ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்திட கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் – வேலைவாய்ப்புகளிலும் – தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி பிறந்தநாள்- கமல்ஹாசன், வைரமுத்து வாழ்த்து

தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். அதேபோல் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம் உதயநிதி தன் மனைவி கிருத்திகாவோடு வந்தார்; நின்றுகொண்டே பேசினார் கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார் அப்போதே தெரிந்துகொண்டேன் வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் இவரென்று…

இன்று 47-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவர், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- துர்காவை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின்னர் அவர், அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு தின வாழ்த்து

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில அரசியலமைப்பு தினமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது. அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் – அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட முகப்புரையை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று காலை…

கோவில் யானை தாக்கி பாகன் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர். இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார். பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3…

தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்- நடிகர் சத்யராஜ் பேச்சு

முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார். விருது பெற்ற நடிகர் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி மிக மிக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு மிகப்பெரிய உதாரணம், கோவைக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஓய்வறியா சூரியன் என்று டாக்டர் கலைஞரை கூறுவார்கள். அதேபோல், ஸ்டாலின் அவர்களும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றுபவர். ஓயாமல் உழைப்புக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர்களின் தலைமையில் தினந்தினம் திட்டங்களை யோசித்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆராய்ந்து தொடர்ந்து…

கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது முதல்வர் ஸ்டாலின்

திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது, திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, “கலைஞர் 100 – வினாடி-வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். ‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் – தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார். தலைவர் கலைஞரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில்…

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: தமிழக முதல்வர் ஸ்டாலின்

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில்…

பள்ளி ஆசிரியை கொலை சம்பவம் மிகவும் மிருகத்தனமானது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) த/பெ.முத்து அவர்கள் இன்று (20.11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை…