தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவர், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- துர்காவை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின்னர் அவர், அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.