சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:- சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.…
Category: பொது செய்தி
தமிழக ஆளுநருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெரு நாட்டை உலுக்கிய நிலநடுக்கம் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் பூமியோடு சேர்ந்து குலுங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இதே போன்று வீட்டினுள் இருந்த மின்விளக்குகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.காராவெலியிலே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலையில் இருந்த பாறைகள் சரிந்து பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை, நாமக்கல் திருவண்ணாமலை, காரைக்குடி என 4 மாநகராட்சிகள்உதயம்: சட்டசபையில் மசோதா தாக்கல்
தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த…
விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 63பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மெத்தனால் சப்ளை செய்த புதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால்,…
சீனாவை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் 7.3 அடி உயரத்துடன் கூடைப்பந்தாட்டத்தில் அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சராசரி உயரத்தைவிட அதிக உயரம் கொண்டவர்கள் மற்றவர்களால் அதிகம் கவனிக்கப்படுவார்கள். அந்த வகையில் சீனாவை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் 7.3 அடி உயரத்துடன் கூடைப்பந்தாட்டத்தில் அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜாங்ஜியு என்ற பெயர் கொண்ட அந்த வீராங்கனை சீன தேசிய அணிக்கான 18 வயதிற்குட்பட்டோருக்கான பிபா மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் அறிமுகம் ஆனார். 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது. அந்த வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பலஅவறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு
சட்டசபையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:- அடுத்தவன் சொத்தை அபகரித்தால் ஆண்டவன் தான் கேட்க வேண்டும். ஆண்டவன் சொத்தை அபகரித்தால் ஆள்பவர் தானே கேட்க வேண்டும். அந்த வகையில், திராவிடமாடல் ஆட்சியில் இதுவரை ரூ.6,004 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இந்த 3 ஆண்டுகளில் தெய்வங்களாக இருக்கின்ற சிலைகள், கலைப்பொருட்கள் மொத்தம் 420 இனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பாதுகாப்பு அறைகள் கட்டி பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் திருப்பணிகள் இதிகாச காலத்திற்கு இணையானது. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுகிற அளவிற்கு 8,962 கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மொத்த திருப்பணிகள் 20,166 மதிப்பீட்டுத் தொகை…
“கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பதிவில் ராகுல்காந்தி நன்றி
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும்” என்று பதிவிட்டு வாழ்த்தினார். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவை பகிர்ந்து ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அதில், “தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) யாரும் மனுக்களைத் திரும்ப பெறவில்லை. இதனால், இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை. மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில்…