ஜம்மு காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்முதல்வர் உமர் அப்துல்லா – கலந்து கொண்டு ஓடினார்

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்றுள்ளார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி சாதனை படைத்தார்.அப்துல்லா ஓடும்போது அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர். இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடியதில்லை என்று தெரிவித்த அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா சனிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, உடல் பரிசோதனைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதால், திங்கள்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்எம் கிருஷ்ணா (92), மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2012 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவிவகித்தார். முன்னதாக அவர் ஆகஸ்ட் மாதம், சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள்களாக தேடப்பட்ட பயங்கரவாதிகள் 2பேர் கைது!

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, மக்களை அச்சுறுத்தி வந்த ‘ஜம்மு-காஷ்மீர் காஸ்னாவி படையைச்(ஜேகேஜிஎஃப்)’ சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பூஞ்சில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம், பூஞ்சில் திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. நீண்டநாள்களாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளது குறித்து, காவல்துறையின் ஜம்மு பிரிவு கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின் தெரிவித்ததாவது, “ஹரி கிராமத்தை சேர்ந்த அப்துல் ஆஸிஸ், மன்வார் ஹுசைன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படைகளின் சாதனையாகவே கருதுகிறோம். ராஷ்டிரிய ரைஃபில்ஸின் 37-வது பிரிவு மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின்(சி ஆர் பி எஃப்) 38-வது பிரிவுகளுடன் இணைந்து காவல்துறையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, மேற்கண்ட பயங்கரவாதிகள் இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 3 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பூஞ்ச் மாவட்டத்தில் கோயில்,…

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபர்… குளத்திற்கு நடுவில் பாய்ந்த கார்- போலீசார் வழக்குபதிவு

தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார். இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர். இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பீகாரில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் இயங்கி வருகிறது – தேஜஸ்வி யாதவ்

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், “பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர். தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும்…

காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்காக நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரகவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை…

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தின் வரைவை பிரதமா் மோடியிடம் வழங்க விரைவில் ஒமா் தில்லி செல்ல உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை உள்ளூா் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம், ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரும் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் இன்று (அக். 19) உறுதிப்படுத்தியுள்ளன. இதனிடையே, ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை கோரும் தீர்மானத்தில், முன்பு இருந்ததைப் போல் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை…

சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி பயணம் செய்த பயணி

சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே பேருந்து வந்துள்ளது. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் பயங்கரம் மெதுவாக போங்க என்ற முதியவரை சாலையிலேயே அடித்துக் கொன்ற பைக் ஓட்டுநர்- வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

சாலையில் வண்டியில் சென்றவரை மெதுவாக போகும்படி அறிவுறுத்திய முதியவர் அடித்துக்கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அல்வால் [Alwal] பகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அன்றைய தினம் அல்வால் சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்றவரை மெதுவாக செல்லும்படி முதியவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.அந்த பைக்கில் வந்த நபருடன் அவரது மனைவியும், மகனும் உடன் வந்துள்ளனர். முதியவரைக் கீழ் தள்ளி அடித்துக்கொண்டிருந்த தனது கணவனை சமாதானப்படுத்தி மனைவி முயன்றுள்ளார்.…