கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா சனிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, உடல் பரிசோதனைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதால், திங்கள்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஸ்எம் கிருஷ்ணா (92), மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2012 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவிவகித்தார்.
முன்னதாக அவர் ஆகஸ்ட் மாதம், சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.