உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன. 2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஸ்வப்னில் குசேல் 451. 4 புள்ளிகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள்…
Category: இந்தியா
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தமிழத்திற்கு பணியாற்றியவர் குமரி அனந்தன். எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரி அனந்தன் தகைசால் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
கேரளா நிலச்சரிவால் பாதிக்கபட்டவர்களுக்கு ரூ. 50 லட்சம்- சூர்யா, கார்த்தி, ஜோதிகா அறிவிப்பு
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப்…
ஜார்க்கண்டில் சட்டசபையில் அமளி 18 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு நீக்கம்
ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின. இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது…
மழைநீர் கசிவு ஏற்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடம்-பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு – எதிர்க்கட்சிகள் கிண்டல்
டெல்லியில் கனமழை பெய்து வருவதால், பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. பாராளுமன்றத்திற்குள் தண்ணீர் ஒழுகும் வீடியோக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் தங்களது எஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் தண்ணீர் ஒழுகுவது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அப்போது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நேரத்தை பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, பாராளுமன்றத்திற்கு உள்ளே மழைநீர் கசிவு. புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவடைவதற்குள்…
பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின்தங்கிய அருந்ததியினருக்குஉள்ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார். இதனையடுத்து அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.…
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராகுல்- பிரியங்கா நேரில் ஆய்வு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார். மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…
யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்
யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குமுன் தலைவராக இருந்த மனோஜ் சோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததையடுத்து, ப்ரீத்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவியேற்கவுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் 29 வரை இப்பதவியில் இருப்பார். 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். யுபிஎஸ்சியின் 2 ஆவது பெண் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு ஆர் எம் பாத்யூ என்பர் யுபிஎஸ்சியின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சோனி அதன்பின் கடந்த 2023…
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஊட்டியில் இருந்து 2 மருத்துவ குழு சென்றுள்ளது-அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு, மாநில இடங்களுக்கான கலந்தாய்வை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 21-ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில்…
சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு.. ராகுலின் சாதி இதுதான் – காங்கிரஸ் பதிலடி
பாராளுமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக அதற்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசுகையில், சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார். அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதிய கன்னூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் ராகுல் காந்தி “நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான…
