கோப்பு படம்
Category: இந்தியா
வங்கதேச கலவவரத்தில் 115 பேர் உயிரிழப்பு இந்திய மாணவர்கள் 998 பேர் நாடு திரும்பினர்
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000 பேர் அங்கிருந்து நாடு திரும்பினர். வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது. இது பாரபட்சமானது என்றும் திறமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்தது. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் பல இடங்களில்…
கோவா அருகே சரக்கு கப்பலில் தீவிபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலி.. மீட்புப்பணிகள் தீவிரம்
கோவா அருகே வணிக சரக்குக்கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். IMDG எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்த்து. அப்போது சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது. கப்பல் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் இந்திய கடலோரக் காவல்படையினர் 2 படகுகளில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ…
இது சைபர் தாக்குதலோ.. பாதுகாப்பு குளறுபடியோ அல்ல- Crowdstrike சி.இ.ஓ விளக்கம்
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் Crowdstrike நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இது சைபர் தாக்குதலோ, பாதுகாப்பு குளறுபடியோ அல்ல. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. Mac மற்றும் Linux பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படவில்லை. Crowdstrike இணையதளத்தில் தொடர்ச்சியாக அப்டேட்டுகள் வழங்கப்படும்.Crowdstrike வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 2 லட்சம் கோடி வரி செலுத்தியும் டெல்லிக்கு ஒரு பைசா தரவில்லை- மத்திய அரசு மீது அதிஷி குற்றச்சாட்டு
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரி வசூல் செய்த போதிலும், மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவு என தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு மீது தொடர்ந்த குற்றம்சாட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது டெல்லி மாநில அரசும் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநில மந்திரி அதிஷி கூறியதாவது:- மத்திய ஜிஎஸ்டி மூலம் டெல்லி மாநிலம் மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வருமான வரி மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் டெல்லி மாநிலத்தில் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளது. ஆனால் டெல்லி அரசு கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கேட்கிறது. ஆனால் கடந்த ஆண்டு…
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி, விமான சேவை கடும் பாதிப்பு
விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், விண்டோஸ் முடங்கியதன் எதிரொலியால் ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கிகள், மருத்துவமனை சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் விமான நிறுவனங்களின் ஆன்லைன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களில், ஆன்லைன் சேவைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் மேனுவல் முறையை…
நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளும் டி-சீரிஸ் இணை உரிமையாளரின் 20 வயது மகள் புற்றுநோய்க்கு பலி
இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கிடையே, டி-சீரிஸ் இணை உரிமையாளரும், நடிகருமான கிருஷண்குமாரின் மகள் தீஷா குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 20 வயதான தீஷா மும்பையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஜெர்மனியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தீஷா நேற்று உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புற்றுநோய்க்கு…
மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய ரெயில் சேவை: மத்தியமைச்சர் தொடங்கி வைத்தார்
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில் (வண்டி எண்.16766/16765) சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், மேட்டுபாளையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதேபோல, மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் இயக்கக்கூடிய புதிய ரெயிலையும், கோவை – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
கும்பே அருவியில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி
‘வாரிசு’ படத்தில் வரும் கும்பே அருவியில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. பல்வேறு இடங்களுக்கு…
குழுந்தையின் முதுகில் 15 செ.மீ. நீள வால் வெட்டி எடுத்த மருத்துவர்கள்
தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மருத்துவர்கள், மூன்று மாத கைக்குழந்தையின் வாலை அகற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், குழந்தையின் லும்போசாக்ரல் பகுதியில் அமைந்துள்ள 15 செ.மீ வால் அகற்றப்பட்டது. எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள குழந்தைகள் துறையின் தலைவர் டாக்டர் ஷஷாங்க் பாண்டா தலைமையிலான இந்த அறுவை சிகிச்சை, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான 40 அறுவை சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை, 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மனித வால் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வெளியேறி பிறந்தது. மனித வால்கள் ஒரு அரிய பிறவி குறைபாடு ஆகும். இதைத்தவிர, குழந்தைக்கு S1 முதல் S5 முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பு நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடைய முதுகெலும்பு டிஸ்ராபிசம் இருந்தது. இது…
