கோவா அருகே வணிக சரக்குக்கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். IMDG எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்த்து. அப்போது சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.
கப்பல் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் இந்திய கடலோரக் காவல்படையினர் 2 படகுகளில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.