டெல்லி மோசமான நிலையில் உள்ளது-பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், அவரது மனைவி ஆகியோர் டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர் கூறுகையில், டெல்லி மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சிப் பணிகள் இல்லாததால் தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

சென்னை மெட்ரோ ரெயிலில் திடீர் தீப்பொறி அவசரமாக நிறுத்தப்பட்ட ரெயில்

சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இது போருக்கான நேரமல்ல: கூட்டறிக்கையில் வலியுறுத்திய பிரதமர் மோடி

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர். அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம். பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என…

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம் காங்கிரஸ் முடிவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது: பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, ‘2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது’ என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத்தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலி, 6 பேருக்கு காயம்

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தின் ரோந்து பணியின்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் ரோந்து சென்ற ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதுடன், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் ராகுல் காந்தி மக்களுக்கு ஆறுதல் கூறினார்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இதில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற சூழல் நிலவுகிறது. வன்முறை காரணமாக பலர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் அசாம் மாநிலத்திற்கு சென்றார். அசாம் மாநிலத்தின் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தங்க வைக்கப்பட்டவர்கைளை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து மணிப்பூர் சென்றார். மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்ட உயர்நிலை பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள முகாமில் தங்கியிருந்தவர்களை…

கேரளாவில் ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநருக்கு அரிவாளை எடுத்து காட்டி மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது

கேரள மாநிலம் கொண்டோட்டி பகுதியில் சாலையில் முந்திச் செல்வதற்காக தொடர்ந்து ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநருக்கு, அரிவாளை எடுத்துக் காட்டிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கொண்டோட்டி பகுதியை நெருங்கியது. அப்போது ஒரு ஆட்டோ நீண்ட நேரமாக வழிவிடாமல் சென்றதால் பேருந்து ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்து வெளியே நீட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சம்சுதீன், அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்ததால் கோவமான சம்சுதீன் அரிவாளை எடுத்து காட்டியதாக காவல்துறை…

நீட் வினாத்தாள் கசிவை ஒத்துகொண்ட மத்தியஅரசு- மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது முக்கியம் – உச்ச நீதிமன்றம் கருத்து

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு வினாத்தாள்…

மொபைல் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு விளக்கம் அளிப்பு

சந்தை நிலவரத்தை பொறுத்து, ‘டிராய்’ ஒப்புதலுடன் தான் மொபைல் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உலகளவில், இப்போதும் மிகவும் குறைவான கட்டணமே நம் நா ட்டில் உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. மொபைல் சேவை வழங்கும் மூன்று தனியார் நிறுவனங்களான, ‘ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா’ ஆகியவை தங்களுடைய கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தின. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக இந்த நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு ஏன் கட்டுப்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. சந்தை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அதே நேரத்தில் பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணங்கள் நிர்ணயிப்பதை டிராய் கண்காணித்து வருகிறது.…

புதுப்புது காய்ச்சலால் மரணம் கேரளாவில் மக்கள் பீதி

கேரளாவில் டெங்கு, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் உட்பட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து, மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், டெங்கு காய்ச்சலும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், மேலும் பலவிதமான காய்ச்சல்கள் அங்கு வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: மாநிலம் முழுதும் கடந்த ஐந்து நாட்களில் 55,830 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 493 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…