டெல்லி மோசமான நிலையில் உள்ளது-பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், அவரது மனைவி ஆகியோர் டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர் கூறுகையில், டெல்லி மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சிப் பணிகள் இல்லாததால் தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment