பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள்.…
Category: உலகம்
இது சைபர் தாக்குதலோ.. பாதுகாப்பு குளறுபடியோ அல்ல- Crowdstrike சி.இ.ஓ விளக்கம்
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் Crowdstrike நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இது சைபர் தாக்குதலோ, பாதுகாப்பு குளறுபடியோ அல்ல. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. Mac மற்றும் Linux பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படவில்லை. Crowdstrike இணையதளத்தில் தொடர்ச்சியாக அப்டேட்டுகள் வழங்கப்படும்.Crowdstrike வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி, விமான சேவை கடும் பாதிப்பு
விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், விண்டோஸ் முடங்கியதன் எதிரொலியால் ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கிகள், மருத்துவமனை சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் விமான நிறுவனங்களின் ஆன்லைன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களில், ஆன்லைன் சேவைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் மேனுவல் முறையை…
சீனா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- 16 பேர் பலியான சோகம்
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கதவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில், மொத்தம் 16 பேர்உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் அவசரகால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்த…
ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்- 13 பேரில் 9 பேர் உயிருடன் மீட்பு
13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 13 இந்திய மாலுமிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர். இந்த கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே…
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்த சைக்கோ கொலையாளி கைது
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கொலையாளி ஒப்பு கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் தட்டிசென்றது
நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா. தென் அமெரிக்க கால்பந்து அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடும். இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் தொடரின் இறுதிப் போட்டி தொடங்க இருந்தது. மைதானத்துக்குள் ரசிகர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் காலை 6.55 மணி அளவில் போட்டி தொடங்கியது. ஆட்டம் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக தொடங்கி இருந்தது. ஆட்டத்தில் முழு நேரமான 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் கடந்தும் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா தரப்பில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால் 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கப்பட்டது.…
துப்பாக்கிச் சூடு என்னை பலமானவனாக மாற்றியுள்ளது“ – வாசகத்துடன் விற்பனையாகும்டொனால்ட் ட்ரம்ப் டி-சேர்ட்டுகள்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்றைய தினம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது 20 வயது இளைஞனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அவருக்கு பலரும் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், தற்போது டி-சேர்ட் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. டொனால்ட் ட்ரம்பின் காதில் இரத்ததுடனும் ஒரு கையை உயர்த்தியப்படியும் இருக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டு ‘துப்பாக்கிச்சூடு என்னை பலமானவனாக மாற்றியுள்ளது’ (Shooting Makes Me Stronger) என்ற வாசகத்துடன் குறித்த டி-சேர்ட்டுகள் இணையவழியில் விற்பனையாகி வருகின்றது. டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தி 3 மணிநேரத்திற்குள் சீன இ-கொமர்ஸ் தளமான Taobaoஇல் இந்த டி-சேர்ட்டுகள் விற்பனைக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு
யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போருக்கான நேரமல்ல: கூட்டறிக்கையில் வலியுறுத்திய பிரதமர் மோடி
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர். அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம். பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என…