நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக, இதயங்களை நொறுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற…
Category: உலகம்
இலங்கை அதிபர் தேர்தலில்மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டி தமிழர்களின் முடிவு என்ன?
இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே…
வங்காளதேசத்தில் ப்ரிசன் பிரேக்.. 518 கைதிகள் தப்பி ஓட்டம், பலரிடம் பயரங்க ஆயுதங்கள் பயங்கவாதிகளும் உள்ளதாக அச்சம்
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார். எனினும், இதற்கான நடவடிக்கைகள் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 518 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறைச்சாலை இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக…
பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்அடைந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார். பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர்…
வங்கதேசம் டாக்காவை விட்டு வெளியேறிய பிரதமர் ஹசீனா- ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் காரணமாக நேற்று காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில்…
அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் ஓமன் வளைகுடா பகுதிக்கு விரைவதால் – மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் ஈரான் ராணுவம் நேற்றுவிடுத்த அறிக்கையில், ‘‘7 கிலோ எடையுள்ள குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது’’ என கூறியிருந்தது. இஸ்மாயில், ஈரானுக்கு வரும்போதெல்லாம், ஈரான் ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள இதே விருந்தினர் மாளிகையில்தான் தங்குவார். ஈரான் முன்னாள் அதிபர்…
ஹமாஸ் தலைவரை கொலை செய்ய ஈரான் ஏஜெண்டுகள் திடுக்கிடும் தகவல்கள்
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அந்த சமயத்தில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்து அவரை படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகளை நிரப்ப இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் ஈரானின் செக்யூரிட்டி ஏஜெண்டுகளை நியமித்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் மரணமடைந்த ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் தெக்ரான் நகரத்திற்கு…
பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் போட்டி மூலம் 3ஆவது பதக்கம் வென்ற இந்தியா!
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன. 2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஸ்வப்னில் குசேல் 451. 4 புள்ளிகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள்…
மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் ராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய…
இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு இந்நதிய வெளியுறவுத்துறை கண்டனம்
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்துது. அவர்களைக் கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றனர். இதில் கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரன் என்ற மற்றொரு மீனவரி மீட்கும் பணி நடந்துவருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை…