உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று மாடி கட்டடம் இடித்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. இதில் பலர் உள்ளே சிக்கிய நிலையில் தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் அவர்களை வெளியில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்தனாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இடித்து விழுந்த இந்த…
Category: முதன்மை செய்திகள்
உலகளவில் முடங்கியது எக்ஸ் தளம்- டவுன்-டிடெக்டர் அறிவிப்பு
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர். திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.
வினேஷ்போகம் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, கடவுள் கொடுத்த தண்டனை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு…
“மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும்” நிகழ்சச்சி முடிந்து தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியை கண்டித்து, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் 21 கேள்விகளுக்கு பதில்தமிழக வெற்றிக் கழகம் வழங்கியது
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார். இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம்…
முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எதிர்கட்சிதலைவர் எடப்பாடி
முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு கூறிய கருத்துகள் தவறானது. மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. மாற்றுத்திறனாளிகளை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். நாமக்கல் அரசுப் பள்ளி சுவரில் மனிதக் கழிவை சமூகவிரோதிகள் பூசியிருக்கிறார்கள். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே வேங்கைவயல் சம்பவத்தில் இன்னும் அரசால் தீர்வு காண முடியவில்லை. திமுக ஆட்சியல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பயமில்லாமல் ஈடுபடுகிறார்கள். மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருப்பதாக செய்திகள்…
இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சிரூ.5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இன்றைய சென்சக்ஸ் வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது. ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தகவல்தொடர்பு , ஐடி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி , எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளிட்ட…
பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரவீன் குமார்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கம் ஆகும்.
மனித வேட்டையில் ஈடுபடும் ஓநாய்கள் சுட்டுப்பிடிக்க யோகி ஆதித்யநாத் நடவடிக்கை
உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர். ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
