குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. மாடுகளை…
Category: முதன்மை செய்திகள்
மாயமான ரஷியா ஹெலிகாப்டர்: விபத்தில் சிக்கியதுல் 22 பேர் உயிரிழப்பு: ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன.
ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், காணாமல் போன ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி ராஜினாமா செய்தார்
ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார். கே.சி. தியாகி, தனது ராஜினாமா குறித்து கட்சித் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் “கடந்த சில மாதங்களாக நான் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் என்னால் பணிபுரிய முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை புதிய செய்தித் தொடர்பாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளது, ஐக்கிய ஜனதா தளம்.
சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரம்: ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை பேரணி!
சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின் மகாராஜா சத்ரபதி சிவாஜியின் சிலை கடந்த திங்கள்கிழமை பிற்பகல் (ஆக. 26) இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி…
காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவக் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு பயன்று வந்த மாணவி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார். அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுஇருக்கிறார். அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
லாவோஸ் நாட்டில்கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் 47 பேர் மீட்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை…
பார்முலா 4 கார் பந்தயம்- முக்கிய போட்டிகள் தொடங்கியது
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. நேற்று பயிற்சி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் முக்கிய போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளிக்கின்றனர். நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
பூலித்தேவரின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-வது பிறந்தநாள்!மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்! இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
சென்னைக்கு வந்த டிரக்கில் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான 1,600 ஐபோன்கள் திருட்டு போலீசார் விசாரணை-
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் டிரக்கிலிருந்து 1,600 ஐபோன்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக்கில் இருந்து 1,600 ஐபோன்கள் திருடுபோனதாக புகார் எழுந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.12 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், டிரக்குடன் சென்ற பாதுகாவலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து சாகர் மண்டல காவல் ஆய்வாளர் பிரமோத் வர்மா கூறுகையில், “ரூ. 12 கோடி மதிப்பிலான 1,600 ஐபோன்கள் திருடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பாதுகாவலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. குழுக்கள் அமைக்கப்பட்டு நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். கன்டெய்னர் ஹரியாணாவில் உள்ள குருகிராமில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாதுகாவலர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஓட்டுநரை மடக்கியுள்ளார்” என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை…
