கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார். மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…
Category: முதன்மை செய்திகள்
புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் சவுந்தர்யா மரணம்
தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா. கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார். கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்…
காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடியது அனைத்துகட்சி கூட்டம்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 16) காலை தொடங்கியது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு…
மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் வெட்டிக் கொலை
மதுரையில் இன்று காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தி வெட்டிக் கொலை செய்தது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை செயலாளராக இருந்தார். இன்று (ஜூலை 16) காலை இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று வழிமறித்து அவரிடம் தகராறு செய்து சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தம்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் போலீஸார், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில்,…
மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி நீரை தராத கர்நாடகா அரசு- தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் அறிவிப்பு
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பையும் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த அமைப்புகள் 2018 ஜூன் முதல் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆணையை செயல்படுத்த…
அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் தட்டிசென்றது
நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா. தென் அமெரிக்க கால்பந்து அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடும். இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் தொடரின் இறுதிப் போட்டி தொடங்க இருந்தது. மைதானத்துக்குள் ரசிகர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் காலை 6.55 மணி அளவில் போட்டி தொடங்கியது. ஆட்டம் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக தொடங்கி இருந்தது. ஆட்டத்தில் முழு நேரமான 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் கடந்தும் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா தரப்பில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால் 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கப்பட்டது.…
தமிழகத்தில் 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல்முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதும் ஒன்றாகும். இந்த அறிவிப்பை செயல்படுத்த, கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றும் பெயரிட்டார். இதையடுத்து, உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த வழிமுறைகளை பின்பற்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தில், தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 19,487 முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளும் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தை பொறுத்தவரை, கடந்த…
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு
யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மொத்த வாக்கு பதிவு 82.48 சதவீதம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது. 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 82.48…
சென்னை மெட்ரோ ரெயிலில் திடீர் தீப்பொறி அவசரமாக நிறுத்தப்பட்ட ரெயில்
சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
