தேர்தல் தோல்விக்கு பின்னரும் மாறத ஆட்சியாளர்கள் முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி


புதுச்சேரி.ஜூன்.30-புதுச்சேரி முன்னாள்முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட்‌ தேர்வில்‌ கள்ளத்தனமாக கோடி கணக்கில்‌ பணம்‌ பெற்று கொண்டு தேர்விற்கு முன்பாக வினாத்தாளை விற்றது, மாணவர்கள்‌ தங்களுடைய விடைத்தாள்களில்‌ ஏதும்‌ எழுதாமல்‌ கொடுத்துவிட்டால்‌ ஆசிரியர்களே பதில்‌ எழுதி அந்த விடைத்தாள்களை சமர்ப்பிப்பது போன்ற மிகப்பெரிய ஊழல்கள்‌ நடந்தது. அதனடிப்படையில்‌ ராகுல்‌ பாராளுமன்றத்தில்‌ இந்த பிரச்சனையை ஒத்திவைப்பு தீர்மானம்‌ கொண்டுவந்து விவாதிக்க கேட்டிருந்தார்‌. மாநிலங்களவையில்‌ காங்‌ தலைவர்‌ மல்லிகார்ஜுூனா கார்கே இந்த கோரிக்கையை முன்வைத்தார்‌. தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌ நீட்‌ தேர்வை ரத்து செய்ய குரல்‌ கொடுத்ததன்‌ அடிப்படையில்‌ தமிழக சட்டசபையில்‌ மத்திய அரசு நீட்‌ ரத்து செய்ய கோரி ஏகமனதாக தீர்மானம்‌ நிறைவேற்றினார்‌.
நீட்‌ தேர்வில்‌ ரூபாய்‌ கைமாறியிருப்பதும்‌ மத்திய அரசின்‌ விசாரணையில்‌ தெரியவந்துள்ளது. முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சரும்‌
பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்‌. ஆனால்‌ நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்‌ என்பதை நிராகரித்துள்ளார்‌. இமாலய ஊழலால்‌ மருத்துவ படிப்பில்‌ சேர வேண்டும்‌ என்ற மாணவர்களின்‌ கனவு தகர்க்கப்பட்டுள்ளது. ஆனால்‌ மத்தியில்‌ மைனாரிட்டி அரசு
நடத்தும்‌ மோடி நீட்‌ தேர்வு சம்பந்தமாக எந்த பதிலும்‌ சொல்லவில்லை. இதற்கு பதில்‌ சொல்லியாக வேண்டிய பிரதமர்‌ மாணவர்களை உதாசீனமாக நினைத்து பதில்‌
சொல்லாமல்‌ உள்ளார்‌.
எதிர்கட்சி தலைவருக்கு தர வேண்டிய மரியாதையை ராகுலுக்கு தராமல்‌ மைக்கை துண்டித்துள்ளனர்‌. இது பாராளுமன்ற குரல்‌ வளையை நெரிப்பதாகும்‌. மத்திய அரசு
விவாதத்திற்கு ஏற்று, நீட்‌ தேர்வு ரத்தை அறிவிக்க வேண்டும்‌.
ரேஷன்‌ கடை திறக்காததற்கு முதல்வர்‌ பதில்‌ சொல்ல வேண்டும். தேர்தலில்‌ என்‌.ஆர்‌.காங்‌., பாஜக தேர்தல்‌
அறிக்கையில்‌ எங்கள்‌ கூட்டணி ஆட்டுக்கு வந்தால்‌ ரேஷன்‌ கடைகளை திறந்து. அரிசி, கோதுமை சர்க்கரை, சமையல்‌ எண்ணெய்‌, பருப்பு வகைகளை மாதந்தோறும்‌ வினியோகம்‌
செய்வோம்‌ என்று அறிவித்தனர்‌. ஆனால்‌ ஆட்சி அமைந்து 3 ஆண்டு, ஆகியும்‌ ரேஷன்‌ கடைகளை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை. மத்திய அமைச்சரை
பார்த்துவிட்டு திறப்பதாக அறிக்கை விடுகின்றனரே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும்‌ இல்லை.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்‌ முதல்வர்‌, நமச்சிவாயம்‌ ஆகியோரை ரேஷன்‌ கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை எப்போது கொடுப்பீர்கள்‌? என்று மக்கள்‌ பகிரங்கமாக கேள்வி கேட்டனர்‌. அதன்‌ பின்னரும்‌ கூட ஆட்சியாளர்கள் அதைப்பற்றி கவலைப்பட வில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபோது
தரமான வெள்ளை அரிச வழங்கினோம்‌. ஆனால்‌ மத்திய அரசும்‌, அப்போதைய ஆளுநர்‌ கிரண்பேடியும்‌ புதுச்சேரி மாநிலத்தில்‌ அரிசிக்கு பதிலாக பணம்‌ தர வேண்டும்‌ என்று
ரேஷனில்‌ அரிசி வழங்கும்‌ திட்டத்தை முடக்கினர்‌. அப்போது ரங்கசாமி அதற்கு ஓத்து ஊதினார்‌. நான்‌ நீதிமன்றம்‌ சென்றதற்கு சாதகமான தீர்ப்பு வந்தது. கொரோனா காலத்தில்‌
மோடி அறிவித்த இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்ற ஏற்று கொண்டனர்‌. ஆனால்‌ முதல்வர்‌ மாநில நிதியில்‌ இருந்து அரிச கொடுப்பதை தடுத்து நிறுத்தினர்‌. மத்தியில்‌
இருந்து கொடுத்த அரிசியையும்‌ தடுக்கப்பட்டது. அதுதான்‌ தற்போதும்‌ தொடர்ந்து இருந்து வருகிறது.

ஆளுநர்‌ ராதாகிருஷ்ணன்‌ புதுச்சேரி ரேஷன்‌ கடைகள்‌ திறக்கப்படும்‌ என்று கூறியுள்ளார்‌. கடைகளின்‌ இடம்‌ தனியாரிடம்‌ உள்ளது. அந்த இடத்திற்கு வாடகை தரப்படவில்லை.2 ஆண்டுகளாக ரேஷன்‌ கடை ஊழியர்களுக்கு சம்பளம்‌ தரப்ப வில்லை. அரிசிக்கு
ஒரு கிலோவுக்கு ரூ.30 என பணம்‌ தருகின்றனர்‌. ஆனால்‌ மார்க்கெட்டில்‌ ஒரு கிலோ அரிசி ரூ.40 முதல்‌ ரூ.60 வரை விற்கின்றது. தமிழகம்‌, கர்நாடகாவில்‌ ரேஷன்‌ கடைகளில்‌
அரிசி, பாமாயில்‌, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவைகள்‌ வினியோகம்‌ செய்யப்படுகிறது. புதுச்சேரியில்‌ மக்கள்‌ கோரிக்கையை ஏற்று எப்போது ரேஷன்‌ கடை திறக்கப்படும்‌ என்று முதல்வர்‌ ரங்கசாமியும்‌, அமைச்சர்‌ சாய்‌ சரவணனும்‌ பதில்‌ சொல்ல வேண்டும்‌. ரங்கசாமி தேர்தல்‌ அறிக்கையில்‌ கூறியதை நடைமுறைப்படுத்துவாரா ?

வில்லியனூரில்‌ அமைச்சர்‌ தேனீ மகளுக்கு சொந்தமான இடத்தில்‌ தமிழ்நாடு, கேரள வளத்துறை சந்தன கட்டை களை பறிமுதல்‌ செய்து விசாரணை செய்து வருகின்றனர்‌. சந்தன கட்டை கடத்தல்‌ விவகாரத்தில்‌ நிறைய மர்மங்கள்‌ உள்ளன. எண்ணெய்‌ எடுக்கும்‌ நிறுவன உரிமையாளர்கள்‌. எங்கே சந்தன கட்டைகளை வாங்கினார்கள்‌? அங்கிகரிக்கப்பட்ட மாநில கார்ப்ரேஷன்களிடம்‌ வாங்கினார்களா? சந்தன எண்ணெய்‌ எடுத்தவர்கள்‌ இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு சந்தனை ஆயில் எடுத்தனர்‌? அதனை எந்தெந்த
நாடுகளுக்கு, எவ்வளவு டன்‌ ஏற்றுமதி செய்தனர்‌? அதற்கு சுங்கவரி கட்டினார்களா? புதுச்சேரி தொழில்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ துறை எத்தனை முறை அந்நிறுவனத்தில்‌ சோதனை செய்தனர்‌? புதுச்சேரி அரசுக்கு கட்டப்பட
வேண்டிய வரிகள்‌ கட்டப்பட்டதா ? ஆகியவைகளுக்கு பதில்‌ வேண்டும்‌. இடத்தை வாடகைக்கு விட்டுவிட்டோம்‌, ஒன்றும்‌ தெரியாது என தட்டி கழிக்க முடியாது. இது குறித்து பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும்‌. விசாரணை
நடைபெற்று வருவதால்‌ வனத்துறை அமைச்சர்‌ தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்‌.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி நகர வளர்ச்சி குழுமம்‌ மேல்முறையீட்டு அமைப்பின்‌ கூட்டம்‌ வணிக வரித்துறை வளாகத்தில்‌ நடைபெற்றது. அந்த குழுவிற்கு தலைவராக இருப்பவர்‌ முதல்வா்‌ ரங்கசாமி. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ கொடுத்த அனுமதியை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க புதுச்சேரி நகர வளர்ச்சி குழு மேல்முறையீட்டு குழுவிற்கு அதிகாரம்‌ இல்லை. அனுமதி தரப்படாதது சம்பந்தமாக மேல்முறையீட்டு குழு விசாரணை செய்யலாம்‌. முதல்வர்‌ ரங்கசாமி நடத்திய அந்த கூட்டத்தில்‌ அனுமதியின்றி கட்டப்பட்ட பல கட்டிடங்களுக்கு, அபராதம்‌ பெற்று கொண்டு அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30
கோடி லஞ்சம்‌ பெறப்பட்டுள்ளது. இதில்‌ குழு உறுப்பினர்களும்‌ சம்பந்தப்பட்டுள்ளனர்‌.

ஆட்சியாளர்கள்‌ தேர்தல்‌ தோல்விக்குப்‌ பின்னரும்‌ தொடர்ந்து ஊளழல்‌ செய்து வருகின்றனர்‌. அட்சியாளர்கள்‌ இருக்கின்ற அதிகாரத்தை மக்களுக்கு பயன்படுத்துவதில்லை. புரோக்கர்கள்‌ கமிஷன்‌ வாங்கி தருகின்றனர்‌. முதல்வர்‌ ரங்கசாமி இத்தோடு அரசியல்‌ வாழ்க்கையை முடித்து கொள்வதாக நினைத்து ஒட்டுமொத்த ஊழலை
செய்து வருகின்றார்‌. முதல்வருக்கு தொழில்‌, வியாபாரம்‌ ஏதும்‌ கிடையாது. ஆனால்‌ ரூ.10 கோடிக்கு திருமண
மண்டபம்‌ கட்டுகிறார்‌. அதற்கு பணம்‌ எங்கிருந்து வந்தது? அது ஊழல்‌ பணம்‌ என்று பகிரங்கமாக குற்றம்‌ சொல்லுவேன்‌. மற்ற அமைச்சர்கள்‌ ரங்கசாமிக்கு சலைத்தவர்கள்‌ அல்ல.
அமைச்சர்‌ நமச்சிவாயம்‌ கடந்த 2,3 தினங்களுக்கு முன்பு இலங்கை சென்றுள்ளார்‌. ஏற்கனவே சிங்கப்பூர்‌, மலேசியா, துபாய்‌ போன்ற நாடுகளுக்கு பல முறை சென்றுள்ளார்‌.
தனிப்பட்ட முறையில்‌ செல்ல அவருக்கு உரிமையுண்டு. ஆனால்‌ எந்த அமைச்சரும்‌ தொடர்ந்து வெளிநாடுகளுக்கு செல்லவில்லை. அவரின்‌ துறைகளில்தான்‌ தவறுகள்‌
நடைபெறுகிறது. அவைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. துறைகளின்‌ வேலைகளை
பார்க்காமல்‌ வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்‌. தனிப்பட்ட முறையில்‌ வெளிநாடுகளுக்கு செல்வதாக இருந்தாலும்‌ வெளியுறவுத்துறை அனுமதி பெற வேண்டும்‌. ஆனால்‌ அனுமதி பெறாமலேயே பல முறை வெளிநாடு சென்றுள்ளார்‌. எதற்காக வெளிநாடு சென்றார்‌ மக்கள்‌ என்ற கேள்வி மக்கள்‌ மனதில்‌ எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசு நிர்வாகம்‌ ஸ்தம்பித்துள்ளது. வேலைவாய்ப்பு தரவில்லை. வாக்குறுதிகள்‌ நிறைவேற்றவில்லை. அரசு நிர்வாகம்‌ நிதிப்பற்றா குறை ஆட்சியாக செயல்படுகிறது. மக்கள் விரோத ஆட்சியாக செயல்படுகிறது. இவ்வாறு அவர்‌ கூறினார்‌.

Related posts

Leave a Comment