சமுதாயத்தின் அனைத்து தரப்பிரினரின்
வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பட்ஜெட்
முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு
புதுச்சேரி, ஜூலை. 24-புதுவை முதலமைச்சர் ரங்கசாமி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள். இளைஞர்கள், விவசாயிகள் என
சமுதாயத்தின் அனைத்து தரப்பிரினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதாகவும் நாட்டின்
வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பிரதமரின் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.விவசாய மேம்பாட்டிற்காக
ரூ.1.52 கோடி ஒதுக்கி யிருப்பதும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அடுத்த 2ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கஇருப்பதும், வேளாண்மையை டிஜிட்டல் மயமாக்கி, வேளாண்
உற்பத்தி மற்றும் விற்பனைத்திறனை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்க இருப்பதும், நாட்டின்உணவு தேவையில் தன்னிறைவுஅடைய உதவும் என்பதில்
ஐயமில்லை. பெண்கள் மற்றும்சிறுமி களுக்கு பயனளிக்கும்திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.3
லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பது பெண்கள்தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும். பொருளாதாரவளர்ச்சியில் பெண்களின் பங்கைமேம்படுத்துவதில் பாரதப் பிரதமர் தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி
அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் இந்த நிதிநிலை அறிக்கைஅமைந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 4.1 கோடி இளை ஞர்களுக்குவேலைவாய்ப்பை உருவாக்கித்
தருவதற்காக ரூ.2 லட்சம்கோடி நிதி ஒதுக்கியிருப்பது.
மேலும் வேலை வாய்ப்புகளைஉருவாக்குவதற்காக, ரூ.1.48கோடியை முன்மொழிந்திருப்பது, அடுத்த ஐந்தாண்டில்20 லட்சம் இளைஞர்கள்திறனை மேம்படுத்துவதற்கானபயிற்சித் திட்டம் போன்றவை.
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் அளிப்பதாகஉள்ளது.3 கோடி குடும்பங்களுக்கு
வீடு கட்டித் தருவது. பிரதமரின்வீட்டு வசதி திட்டத்தின் கீழ்நகர்ப்புறங்களில் ஒரு கோடி
வீடுகள் கட்டப்படும் என்கிறஅறிவிப்பு. 5 ஆண்டுகளில் ஒருகோடி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குதல், மாணவர்கள்உயர் கல்வி பயில ரூ.10 லட்சம்வரை கடன் வழங்குதல்,தங்கம் மற்றும் வெள்ளிக்குஇறக்குமதி வரி குறைப்பு, முத்ரா
கடன் ரூ.20 லட்சமாக உயர்வு,சோலார் மின் உற்பத்தி திட்டம்மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு300 யூனிட் இலவச மின்சாரம்அளிப்பதற்கான திட்டம்,
புதிய வருமான வரிநடைமுறையில் வரி விலக்கு
உச்சவரம்பு ரூ.75 ஆயிரமாகஅதிகரிப்பு போன்ற பல்வேறுசிறப்பு அம்சங்கள் இந்த நிதிநிலை
அறிக்கையில் இடம் பெற்றிருப்பதுஅனைத்துத் தரப்பு மக்களையும்ஏற்றம் பெறச்செய்யும் என்பதில்
ஐயமில்லை.சமுதாயத்தின் அனைத்து
தரப்பினரின் நிலையைமேம்படுத்தி நாட்டை வளர்ச்சி
பாதைக்கு கொண்டுசெல்லும் வகையிலான சிறப்பான பட்ஜெட்டினைசமர்ப்பிக்க வழிகாட்டுதலாக
இருந்த பிரதமர் மோடி, சிறப்பானபட்ஜெட்டை தாக்கல் செய்தமத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் ஆகியோருக்குஎனது பாராட்டுகளையும்.
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கெகாள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.