புதுச்சேரி அரசின், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபேட்டில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ரூபாய். 24 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் படிக்கட்டுகளுடன் கூடிய ஸ்டெயின்லஸ் ஸ்டீல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு குடை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், ஆதிதிராவிடர் வரைநிலை மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் திருவருட்செல்வன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஹரிகிருஷ்ணன், கனகசுப்புராயன், குமார், அங்காளன், பழனிசாமி, கலியமூர்த்தி, தயாளன், அஞ்சாப்புலி, அன்புநீதி, அன்பழகன், குமாரதேவன், ஏழுமலை, கதிரவன், செல்வராசு, ரமேஷ், மனோகர், தாஸ், எழில், ரஜினி, தமிழ், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், வேல்முருகன், சுந்தர், வடிவேல், அம்பேத், உலகநாதன், தக்ஷிணாமூர்த்தி, அன்பரசன், பிரவீன், கனகராஜ் ,சிவக்குமார், விஜய், யுவராஜ், விக்கி, மணி, சேகர், கலை ராஜ், சதீஷ், பார்த்திபன், முருகன், நாகராஜ், பாகுபலி, பீமாராவ் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், கே வி ஆர் ஏழுமலை, மற்றும் ராஜி, சபரி, தங்கராசு,மில்ட்ரி முருகன், சதாசிவம், சசிகுமார், சிராஜி, வீரக்கன்னு, திலகர், நடராஜன்,பவித்ரன், காசிநாதன், கோதண்டம், சேகர், வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.