பீகாரில் பயங்கரம் ரெயில்வே போலீஸ் தாக்கியதில் குடல் சரிந்து விழுந்த இளைஞர்

பீகாரில் ரயில்வே போலீஸ் சரமாரியாக அடித்ததில் பயணியின் குடலே வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் வியாழக்கிழமை பீகாரில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரெயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார்.

நடைமேடையில் ரெயில் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறி சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த ரெயில்வே போலீஸ் [GRP] கான்ஸ்டபிள்கள் இருவர் பயணிகள் மீது தடியடி நடத்தத்தொடங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

பார்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில், அவரது குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பே பர்கானுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் காவலர்கள் அடித்ததில் அவரது குடல் தையல் வழியாக வெளியே வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பர்கான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே எஸ்.பி உட்பட இரண்டு கான்ஸ்டபிள்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

Related posts

Leave a Comment