மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் புதுச்சேரி மக்களை வஞ்சித்துள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பூ. மூர்த்தி வரவேற்று பேசினார்.
கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான முனைவர் சபாபதி மோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஒன்றிய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கின்ற வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், எஸ். தர்மராஜன், ஆர். ரவீந்திரன், டி. செந்தில்வேலன், ப. இளம்பரிதி, பெ. பழநி, மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமார், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், விவசாய அணி வெ. குலசேகரன், வர்த்தகர் அணி சு. ரமணன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், பொறியாளர் அணி ஆ. அருண்குமார், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, மகளிர் தொண்டர் அணி சுமதி, அணித் தலைவர்கள் வழக்கறிஞர் அணி ச. லோககணேசன், மகளிர் அணி ரா. சந்திரகலா, ஆதிதிராவிட நலக்குழு மு. பழனிசாமி, மீனவர் அணி பா. தில்லையப்பன் (எ) ரமேஷ், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை புலவர் பா. கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் அணி எஸ்.பி. பூபாலன், வர்த்தகர் அணி க. செல்வமுத்து குமார விநாயகம், சுற்றுச்சூழல் அணி அரங்க பன்னீர்செல்வம், அயலக அணி மு. முகஹம்மது தாஹா, அமைப்புசாரா ஓட்டுநர் அணி எஸ்.எம்.எஸ். ஸ்ரீதர், தொமுச பொ. அங்காளன் மற்றும் துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.