ஸ்ரீரங்கம் பள்ளியில் திடீர் ஆய்வில் இறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அல்லூர் பாரதி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி மாவணர்களுடன் அமர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

Related posts

Leave a Comment