தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல் உள்ளனர் காங்கிரஸ் சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போலும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போலும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல் உள்ளனர் என்று கூறி புது சச்சரவை துவக்கி வைத்துள்ளார். இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சை ஆகி உள்ளது.

Related posts

Leave a Comment