லஞ்சம்‌ பெற்று சிகப்பு ரேஷன்கார்டு விநியோகம்‌சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சட்டசபையில்‌ எம்‌எல்எக்கள்‌ வலியுறுத்தல்‌

புதுவை சட்டசபையில்‌ புதுச்சேரி சட்டசபையில்‌ஆளுநர்‌ உரைக்கு நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானத்தில்‌சுயேச்சை எம்‌எல்‌ஏ அங்காளன்‌ பேசியதாவது: டெல்லி செல்லாவிட்டால்‌ எப்படி நிதி பெறமுடியும்‌? கவர்னர்‌ உரையில்‌ பெரிய வளர்ச்சி திட்டம்‌ ஏதும்‌ குறிப்பிடவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்‌ அரசு தோல்வி அடைந்துள்ளது. ஆண்டுதோறும்‌ என்ஜினியரிங்‌ முடித்து 5 ஆயிரம்‌ மாணவர்கள்‌ வெளியே வருகின்றனர்‌. ஆனால்‌, அவர்கள்‌ வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை தேடும்‌
சூழல்தான்‌ உள்ளது.

பல்வேறு துறைகளில்‌ திட்டங்கள்‌ போட்டாலும்‌போதிய நிதி இல்லாமல்‌ வங்கியில்‌ கடன்‌ பெற்றுதான்‌செய்ய வேண்டிய நிலை உள்ளது. கூட்டணி ஆட்சி
என்று கூறி டெல்லி செல்லாவிட்டால்‌ எப்படி நிதிபெற முடியும்‌? சிவப்பு ரேஷன்‌ கார்டு தந்ததில்‌ முறைகேடுநடந்துள்ளது. 25 ஆயிரம்‌ புதிய ரேஷன்‌ கார்டுகள்‌ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கைவிட சிவப்பு கார்டு அதிகம்‌ வழங்கப்பட்டுள்ளது. இதனால்‌ மக்களுக்கு எந்த பயனும்‌ இல்லை. ஒரு லட்சம்‌ சிவப்பு ரேஷன்‌ கார்டு கூடுதலாக உள்ளது. எப்படி நல திட்டம்‌ கொண்டு வர முடியும்‌.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர்‌ சாய்‌சரவணன்குமார்‌: தவறாக சிவப்பு ரேஷன்‌ கார்டுயாருக்கும்‌ கொடுக்கவில்லை, அனுமானமாக எதையும்‌
கூறக்கூடாது, ஆதாரத்துடன்‌ கூற வேண்டும்‌ என்றார்‌.

சுயேட்சை எம்எல்ஏ நேரு:லஞ்சம்‌ வாங்கு சிவப்பு ரேஷன்‌ கார்டு தந்துள்ளனர்‌. ரூ. 15 ஆயிரம்‌ லஞ்சம்‌ கொடுத்து கார்டு வாங்கியிருக்கின்றனர்‌.

காரைக்கால்‌ எம்‌.எல்‌.ஏ., பிஆர்சிவா:ரேஷன்‌ கார்டு முறைகேடு குறித்து சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்‌.

நேரு: ரேஷன்‌ கார்டு முறைகேடு குறித்து விசாரியுங்கள்‌.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்‌.துறையே அமைச்சரை விட்டு போய்விட்டது

சாய்‌ சரவணல்குமார்‌:; குற்றச்சாட்டை நிருபிக்க ஆதாரம்‌ தேவை. ஆதாரம்‌ இருக்கிறதா? லஞ்சம்‌ எங்கு யாருக்கு தந்தார்கள்‌ என்பதை தெளிவாக நிருபியுங்கள்‌.

நேரு: லஞ்சம்‌ கொடுத்தவர்களை அழைத்து
வரட்டுமா?
அங்காளன்‌: துறையே அமைச்சரை விட்டு
போய்விட்டது. அது தெரியாமல்‌ பேசுகிறார்‌.

சாய்‌ சரவணன்குமார்‌; ஜனநாயகத்தில்‌ எதுவும்‌
நடக்கலாம்‌.
அங்காளன்‌: குடிமை பொருள்‌ அலுவலகம்‌
மூடப்பட்டு கிடக்கிறது. முதல்வர்‌ பதில்‌ அளிப்பார்‌

தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மாறி, மாறி
உறுப்பினர்கள்‌ கூறினர்‌. இதனையடுத்து சபாநாயகர்‌ செல்வம்‌ குறுக்கிட்டு பேசுகையில்‌:
இதுதொடர்பாக ஆய்வு பணி நடக்கிறது. முதல்வர்‌
நடவடிக்கை எடுக்க உள்ளார்‌. இது தொடர்பாக மானிய
விவாதத்தில்‌ முதல்‌ அமைச்சர்‌ பதில்‌ அளிப்பார்‌.

அங்காளன்‌: கடந்த 3 ஆண்டாக. வழங்கப்பட்ட
ரேஷன்‌ கார்டுகளை ஆய்வு செய்யுங்கள்‌. தொடக்க
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்‌ விவசாயிகள்‌
அல்லாதோருக்கு கடன்‌ தரப்பட்டுள்ளது. தனியார்‌
நிறுவனத்தை விவசாய நிலமாக காட்டி கடன்‌
பெற்றுள்ளனர்‌. இதுதொடர்பாக போலீசில்‌ புகார்‌
அளித்தும்‌ வழக்குபதிவு செய்யவில்லை. தவறு செய்தோர்‌ மீது நடவடிக்கை எடுக்க தடையாக ஆட்சியாளர்களே உள்ளனர்‌. உண்மையான விவசாயிகளுக்கு கடன்‌ தரவேண்டும்‌.
இவ்வாறு அங்காளன்‌ பேசினார்‌. அதனைத்தொடர்ந்து வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்கள் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனைவரும் எருந்து நின்று 2 நிமிடம் அஞ்சல்செலுத்தினர்.

Related posts

Leave a Comment