புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 6–ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதற்காக சட்டமன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, திமுக உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாகதியாகராஜன், காங்கிரஸ் உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், திமுக நிர்வாகிகள் மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், சண்முகம், கோபாலகிருஷ்ணன், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts

Leave a Comment