புதுச்சேரி ஜீவானந்தபுரம் ஓட வாய்க்காலில் வாலிபர் அடித்துச் செல்லப்பட்டார் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்


புதுவையில் நேற்று இரவு 9 மணி முதல் 5 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது இதில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி ஓடைகளில் அதி வேகத்துடன் தண்ணீர் ஓடியது
இந்நிலையில் ஜீவானந்தம் பெற பகுதி உள்ள மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு அதிக அளவில் மழை நீர் ஆற்றில் செல்வது போல் வேகமாக ஓடியது இதனுடைய பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்( 40) பாலா (40) சந்துரு(20) ஆகிய மூன்று பேர் பைக்கில் செல்லும் போது தண்ணீரில் வேகம் அதிகரித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக்கை பிடிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். இதில் மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லும் பொழுது அருகில் இருந்தவர்கள் பாலா சந்துரு ஆகியோரை பத்திரமாக மீட்டனர் . ஐயப்பன் மட்டும் அருகில் உள்ள ஓடை வாய்க்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் கோரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கோரிமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாய்க்காலில் இறங்கி தேடிய போது ஐயப்பன் எங்கு தேடியும் கிடைக்காததால் தண்ணீரில் அடித்து சென்றிருக்கலாம் என்று கொக்கு பார்க் வரையில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட வந்தனர் .நேற்று இரவு பெய்த கனமழையில் மூன்று வாலிபர்கள் அடித்துச் செல்லப்பட்டது ஒருவர் மட்டும் தண்ணீரில் மாயமான சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் மொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 15.5 செ.மீட்டர் மழை அளவு புதுச்சேரியில் பதிவானது

Related posts

Leave a Comment