புதுச்சேரி மணவெளி டோல்கேட் அருள்மிகு மன்னாத சாமி உடனுறை பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி திருவிழா


புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த மன்னாதசாமி பச்சை வாழியம்மன் கோயிலின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பத்து நாட்கள் விழாவாக தீமிதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவானது நேற்று மாலை 7 மணி அளவில் அக்னி கரகம் அலங்கார கரகம் சக்தி கரகம் சர்வ அலங்காரத்துடன் விமர்சையாக வான வேடிக்கைகளுடன் திரளான மக்கள் கூடி இருந்த இடத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

விழாவில் புதுவை சபாநாயகர் செல்வம் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி முன்னாள் எம்பி ராமதாஸ் முன்னாள் அரியாங்குப்பம் முன்னாள் சேர்மன் ஆனந்தன் உட்பட முக்கிய ஊர் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பருவத ராஜகுல மரபினர்கள் மற்றும் மன்னாதசாமிஉடனுறை பச்சைவாழியம்மன் கோயிலின் தற்போது நிர்வாக குழு தலைவர் இளங்கோவன் செயலாளர் இதயவேந்தன் பொருளாளர் கணேசன் மற்றும் அரியாங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம் மனவெளி பஞ்சாயத்து தலைவர் சங்கர் (எ) கிருஷ்ணமூர்த்தி ஆர் கே நகர் பஞ்சாயத்து தலைவர் முத்துராமன் ஆகியோரின் தலைமையில் அனைத்து பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Related posts

Leave a Comment