நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை லாட்ஜில் வைத்து போட்டோகிராபர் அடித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 27) போட்டோகிராபர். இவரது மனைவி அபூர்வா( 22 )இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்தவர்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவு திருமணம் செய்துள்ளனர். முறைப்படி திருமணம் நடக்கும் வரை தனது பெற்றோர் வீட்டில் அபூர்வ தங்கி இருந்தார். இந்நிலையில் பிரதீப் தனது மனைவியை அபூர்வுடன் சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 17ஆம் தேதி இரவு அறை எடுத்து அடித்து தங்கி உள்ளார் ஏற்கனவே அறிமுகம் ஆணவர் என்பதாலும் இரண்டு முறை இதுபோல் காதலியுடன் அவர் தங்கி இருந்த காரணத்தினாலும் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் அபூர்வாவை தோளில் சுமந்தபடி மாடு அறையில் இருந்து கீழே வந்துள்ளார். அப்பொழுது விடுதியில் பணியில் இருந்த கார்த்திக் (30) என்பவர் பிரதிபிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். இதற்கு அவர் மனைவி மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக ஆட்டோவில் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு போய் அவரை சேர்த்தனர். பிறகு கார்த்திக் அவரைப் சென்று பார்த்த பொழுது அவர் முகம் முழுவதும் காயங்களுடன் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தனது விடுதி மேலாளர்களிடம் கார்த்திக் தெரிவித்தார். அவர் பெரியகடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பிரதீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனது காதல் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்தாக கூறியுள்ளார். அதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையான போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்கு பதிவு செய
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் அபூர்வா பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.