புதுவை கேரம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது

புதுவை மாநில அளவில் கேரம் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது 3 நாட்கள் நடந்தபோட்டியில் மொத்தம் 60 பேர் பங்கேற்றனர். ஃப்ளோரா லீலா நினைவு கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா உழவர்களை எம்ஜிஆர் பூங்காவில் நடைபெற்றது. உழவு கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதல் பரிசு பூஜா 2வது பரிசு வேல்முருகன் 3வது பரிசு அஜித் சிங் 4வது பரிசு சஞ்சய் ஆகியோர் பெற்றனர் . விழாவில் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திர மூர்த்தி கேரம் தலைவர் சாங் சங்கத் தலைவர் தனசேகர் மற்றும் கேரம் சங்க நிர்வாகிகள் பரஞ்சோதி, இருதயராஜ், திருமூர்த்தி , முரளி, செந்தமிழ், ஆரோக்கியராஜ், ஜான் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஞான இருதயராஜ் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment