விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி புதுச்சேரியில் நகை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ள மராட்டியர்கள் நல சங்கம் சார்பில் அம்பலத்தடையார் தெரு மற்றும் பாரதி வீதியில், மும்பையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ராஜ்பாக் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
அதைதொடர்ந்து 7 நாளான நேற்று ராஜ்பாக் விநாயகர் சிலை மற்றும் கடை, வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மராட்டிய இசை கச்சேரியுடன் ஆண்களும், பெண்களுக்கு ஆடிப்பாடியவாறே காந்தி வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று புதுச்சேரி கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரில் உள்ள கடலில் சிலைகளை கடலில் கரைத்தனர்.