புதுவை ஏம்பலம் தொகுதியில் அண்ணா பிறந்தநாள் விழாதிமுக தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது

பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா புதுவை மாநில கழக அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் இன்றைய புதுச்சேரி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் நாளைய புதுச்சேரியின் முதல்வர் சிவா எம்எல்ஏவின் மேலான ஆலோசனையின் படி ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் ஏம்பலம் தொகுதி கழகத்தின் செயலாளர் பி ஆர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. கிருமாம்பாக்கம் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு புதுச்சேரி மாநில முன்னாள் மீனவர் அணி அமைப்பாளர் கழக முன்னோடி தேவநாதன் அவர்களும் தொகுதி பொருளாளர் இளம்பரிதி அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி சுமதி மற்றும் ஏம்பலம் தொகுதியின் செயற்குழு உறுப்பினர் விஜயன் தொகுதி துணைச் செயலாளர் வாலிமுருகன் கிளைக் கழக செயலாளர்கள் பிண்ணாச்சி குப்பம் சங்கர் கிருமாம்பாக்கம் குருசாமி, நிவாஸ் மற்றும் கழகத் தோழர்கள் கழகப் பற்றாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள் இறுதியில் மார்ட்டின் நன்றியுரை ஆற்றினார் . நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Related posts

Leave a Comment