உத்தராகண்ட் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பாக உள்ளனர் – கடலூர் ஆட்சியர் தகவல்

உத்தராகண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச் சரிவுகளில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஆதிகைலாஷ் கோயி லுக்குச் சென்ற போது, ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த 30 யாத்ரீகர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தரகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக, இவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வழியில் ஆதிகைலாஷிலிருந்து 18 கி.மீ.தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு ஆசிரமப் பகுதியில் 30 பேரும் தங்கினர். நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால், கடந்த 6 நாட்களாக அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி உள்ளிட்டவை இல்லாததால், 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சிதம்பரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் வசந்தா தம்பதியினர், தனது மகன் ராஜனை நேற்று செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தகவலறிந்த மாநில வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்புகொண்டு ராணுவம் மூலம் சிதம்பரத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களை மீட்க நட வடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கேட்டபோது ஆதிகைலாஷ் பகுதியில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ளது தொடர்பாக, உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசினேன்.

சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (செப்.15) வானிலையைப் பொருத்து அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்ததாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் 15 பேர் சிக்கிய நிலையில், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மழைப் பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக உத்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளப் எக்ஸ் தளப் பதிவில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 30 கால்நடைகள் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட 30 பேருக்கும், 3,056 வீடுகள் சேதமடைந்தது தொடர்பாகவும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment