கொல்கத்தா ஏர்போர்ட்டில் ஒரு டீயின் விலை 340 ரூபாயா? – ப.சிதம்பரம் கேள்வி

கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது.

அவரது பதிவில், “கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ப. சிதம்பரத்தின் பதிவிற்கு பதிலளித்த கொல்கத்தா விமான நிலையம், “நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment