ஆந்திர பிரதேச மாநில வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதானி குழுமம் சார்பில் நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழை காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
வெள்ளம் பாதிப்புகளுக்கு உதவும் வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 25 கோடி வழங்கியதாக கவுதம் அதானி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தார். இது தொடர்பான பதிவில், “ஆந்திராவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.”
“அதானி குழுமம் ஆந்திரப் பிரதேச மக்களுடன் ஒற்றுமையாக நிற்பதோடு, ஆந்திர மக்களுக்கு ஆதரவை வழங்கும் வகையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி வழங்குகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.