பூட்டியவீட்டில் 4 பேர் பிணம் காட்டி கொடுத்த துர்நாற்றம்

இரண்டு நாள்களாக பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், உள்ளே சென்று பார்த்ததில் ஒரே குடும்பத்தினர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

வடக்கு மகாராஷ்டிரத்தின் பிரமோத் நகர் பகுதியில் உள்ள சமர்த் காலனியில் வசித்து வந்த பிரவின்சின் கிராஸ் (53) என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாகக் கூறி, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமையில் பிரவின்சினின் வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர், அங்கு வசித்து வந்த பிரவின்சின் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

பிரவின்சின் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களின் உடல்களும் அழுகிய நிலையிலும் தரையில் இருந்துள்ளன.

மேலும், பிரவின்சின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், தற்கொலை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், பிரவின்சன் தவிர மீத மூவரும் நச்சுப்பொருளை உட்கொண்டிருப்பது உறுதியானது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அவர்கள் நால்வரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறேதும் காரணமா, ஒருவேளை தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட இருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

பிரவின்சின் பூச்சி மருந்து கடை நடத்தி வந்துள்ளார்; அவரது மனைவி ஆசிரியராகவும், அவரது மகன்கள் இருவரும் படித்தும் வந்துள்ளனர்.

இரண்டு நாள்களாக, பிரவின்சன் குடும்பத்தினர் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment