செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது!”

“சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்!,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment