தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு.. நிர்மலா சீதாராமன் மீது எப்ஐ ஆர் பதிய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதர்ஷ் தனது புகார் மனுவில், “நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக” குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment