அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்றலின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் எல்லைப்பிள்ளைசாவடியில் அமைந்துள்ள அரசு தொடக்கபள்ளியில் அறிவியல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் நடந்த அறிவியல் கண்காட்சியை விழாவினை எஸ். எம். சி. தலைவர் திலகவதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இரண்டு பிரிவாக நடந்த நிகழ்ச்சியில் காலையில் முன் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கலர்ஸ் கிளே கொண்டாட்டத்தில் அனைத்து விதமான வண்ணங்களும், பொருட்கள், ஆடைகள், பூக்கள், கட்அவுட், மிட்டாய்கள், பொம்மைகள் மற்றும் பழங்களை கொண்டு காட்சிக்கு வைத்த விதம் பெற்றோர்களையும் பொது மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனை பொறுப்பாசிரியர் எழிலரசி மற்றும் சுப்புலட்சுமி செய்திருந்தனர்.
மாலையில் அறிவியல் கண்காட்சி பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் குடிநீர் சுத்திகரிப்பு, நீர் சுழற்சி, பூமியை அடுக்குகள் ,நுரையீரல் காற்றாலைகள், மழை நீர் சேகரிப்பு போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டது. பெற்றோர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டோர் அறிவியல் படைப்புகளை கண்டு களித்தனர். இதில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.